Home இலங்கைநெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது – நோர்வே!

நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது – நோர்வே!

by admin

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரனை  சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெடியவன்  தலைமையிலான  குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவரை ஒப்படைக்குமாறு எழுந்த கோரிக்கைகளை நோர்வே மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை  சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, நெடியவனிடம் அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அத்துடன் சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பாக தம்மை உத்தியோகபூர்வமாக அணுகினால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சுமந்திரன் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More