Home இலங்கைஉத்தேச தேர்தல் முறைமை சீர்த்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபானமையினரின் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

உத்தேச தேர்தல் முறைமை சீர்த்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபானமையினரின் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

by admin

உத்தேச தேர்தல் முறைமை  சீர்த்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு   வெளியே  வாழும் சிறுபான்மையினரின்  பிரதிநிதித்துவங்ளை  பாதுகாப்பதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார  தேர்தல் முறைமை  இணைந்ததான தேர்தல் முறைமையொன்று  அறிமுகப்படுத்தப்பட்டாலும் விகிதாசார  தேர்தல் முறைமையின் கீழ்  கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் மத்தியில் உள்ளதை உணரக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலப்பு தேர்தல்  முறைமையின்  ஊடாக தேர்தல் நடத்தப்பட்டாலும் அங்கு தொகுதிவாரியானதேர்தல்   முறைமைக்கு  அமைய அதிக ஆசனங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

தேர்தல் முறைமைத் திருத்தம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை  தீர்மானிக்கும் விடயம் என்பதால்    இதனை  எந்வொரு தரப்புக்கும் சிறு பாதிப்புக் கூட ஏற்படாத வகையில்  உருவாக்குவதன் ஊடாக  நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மையினரின் நல்லெண்ணத்தை  வென்றெடுக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More