இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை சந்தேக நபர்களான ஐந்து காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவு இட்டார்.

யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த கஜன் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்த சுலக்சன் எனும் இரு மாணவர்களும் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நள்ளிரவு யாழ்ப்பான காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.

அது தொடர்பான வழக்கே இன்றைய தினம் நீதிமன்றில் நடைபெற்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.