Home இலங்கைதேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பாதிக்கும் – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பாதிக்கும் – மஹிந்த தேசப்பிரிய

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பாதிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். துர்திஸ்ட வசமாக தேர்தல் காலதாமதம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்றைய தினம் தேர்தல் ஆணைகுழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு 90 நாட்களில் தேர்தலை நடத்த முடியும் எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More