Home இந்தியாஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் – ஷோபியான் நகர பகுதிகளில் 144 தடை உத்தரவு:-

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் – ஷோபியான் நகர பகுதிகளில் 144 தடை உத்தரவு:-

by admin

இன்றையதினம் அப்சல் குரு நினைவு நாளை யொட்டி தீவிரவாதிகள் போராட்ட அறிவிப்பை விடுத்துள்ளதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் ஷோபியான் நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் 4-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து தலைநகரில் 6 காவல்நிலையப் பகுதிகள் மற்றும் ஷோபியான் நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த போராட்ட அழைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடி யிருந்தன எனவும் அரசுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, திஹார் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ம் தேதி, அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More