Home இந்தியாஅதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கம்.

அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கம்.

by admin

அதிமுகவில் இருந்து அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இன்றையதினம்  அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்டமை செல்லுபடியாகாது  என தேர்தல் ஆணையகம் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்து மதுசூதனன்  மனு அனுப்பியிருந்தார்.

மேலும்  அதிமுகவின் சட்ட விதிகளின்படி தாற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை எனவும்  அப்படி யாரையும் தேர்வு செய்யவே முடியாது எனவும் மதுசூதனன் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதிமுகவில் இருந்து தன்னை தன்னை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என   மதுசூதனன்  தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More