207
விமானப்படைத்தளம் மற்றும் ராணுவத்தின் முகாமை அகற்றி தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘பச்சிளம் குழந்தைகளுடன் கொதிக்கிறது கேப்பாப்பிலவு- அரசே திரும்பிப்பார்’, ‘எங்கள் பரிதவிப்பு உங்களுக்கு பரிகாசமா’, உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி, கோஷங்களையும் எழுப்பினர்.
Spread the love