Home இலங்கைகண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பாரதி விழா’

கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பாரதி விழா’

by admin

கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பாரதி விழா’ புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் தமிழ் சங்கத்தின் தலைவர் பி.எஸ். சதீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் இராதா வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக  மத்திய மாகாண கல்வி உதவி செயலாளர் உட்பட கல்வி அதிகாரிகள்¸ கல்வி பணிப்பாளர்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள்¸ சங்கத்தின் உறுப்பினர்கள்¸ கலந்துக் கொண்டர்கள்.

நிகழ்வில் கலாச்சரா ஊர்வலம்¸ இயல் அரங்கு¸ இசை அரங்கு¸ நாடக அரங்கு¸ விவாத அரங்கு போன்றன நடைபெற்றதுடன் பாரதியாரின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தல் மற்றும் அதிதிகளின் உரைகள் போன்றனவும் நடைபெற்றன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More