Home இலங்கைகேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்

by admin

தங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தங்களின் சொந்த நிலங்களே தங்களுக்கு வேண்டும் எனவும் தெரிவித்து சத்தியாக்கிர போராட்டம் நடத்தின் 13ஆவது நாளான இன்று  அங்கு  வட. மாகாண சபையினர்  சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் கேப்பாப்பிலவிற்கு சென்று தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின்  தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் உறுதியாக நிற்கின்ற  இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்புகள், மாணவர் அமைப்புகள், பொது அமைப்புகள், மத அமைப்புகள்,சில  சிங்கள மக்கள், என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றதுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் 10ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More