தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டியவாறு, மட்டக்களப்பு–கல்முனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை நண்பகல் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், ‘அரசியல் பிரமுகர்களே கேப்பாப்பிலவிற்கு விடிவு கொடுங்கள்’, ‘பேராசை அரசின் அரண்கள் எமக்குத் தேவையில்லை’, ‘உடைமையை கேட்பதற்கு தொடரும் போராட்டம் நியாயமில்லையா’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
161
Spread the love