155
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை நேர்காணல் நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோ ரூட்டை அணித்தலைவராக நியமித்துள்ளது.
2015ம் ஆண்டிலிருந்து ஜோ ரூட் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் அலிஸ்டெர் குக் அண்மையில் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love