Home இலங்கைகேப்பாபுலவு செல்பவர்களை கண்காணிக்கும் விமானப்படை

கேப்பாபுலவு செல்பவர்களை கண்காணிக்கும் விமானப்படை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க செல்லும் மற்றும் உதவிகளை வழங்க செல்பவர்களை விமான படையினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்துகொள்கின்றனர்.

கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார்.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தினமும் சமூக ஆர்வலவர்கள் , இளைஞர்கள் , அமைப்புக்கள் என பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவுகாக போராட்டத்தில் ஈடுபடுவதுடன் , பல்வேறு உதவிகளையும் புரிந்து வருகின்றனர். அவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருபோரையே விமான படையினர் புகைப்படம் வீடியோ எடுத்து வருகின்றனார்.

குறித்த விமான படையினரின் முகாம் முகப்பு பகுதியில் இருக்கும் காவலரணில் இருந்தே விமான படையினர் புகைபப்டங்கள் வீடியோக்களை எடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More