சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபா அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் கூவத்தூர் சொகுசு விடுதி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவினால் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் கூவத்தூர் சொகுது விடுதியினுள் காவல்துறை நுழைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த புதன் கிழமை முதல் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் 200 அதிவிரைவுப் படையைச் சார்ந்த வீரர்கள் சொகுசு விடுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சசிகலாவை சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவரை அங்கு கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.