Home இலங்கைமுஸ்லிம் காங்கிரஸையும், தமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறது – நசீர் அஹமட்

முஸ்லிம் காங்கிரஸையும், தமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறது – நசீர் அஹமட்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிளவுப் படுத்த முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த உள்நாட்டு வெளிநாட்டு சதித் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் இதேவிதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றனவா? என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஒருமித்த ஒற்றுமைக் குரல் மிகவும் அவசியமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More