Home இலங்கைதொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு

by admin

இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக்கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் இப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 21ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்காக மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நல்லாட்சியையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் இம் மக்கள், தமது உறவுகள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த இலங்கைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த எட்டு வருடங்களாக உறவுகளை இழந்து பரிதவிக்கும் தமக்கு, சமூக அமைப்புகள், பல்கலைக்கழக குழுக்கள் என சகலரும் ஆதரவு தந்து தமது போராட்டத்திற்கு வலுசேர்க்க உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More