ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா்; ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதீதியாக கலந்துகொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவின் மருதநகா் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தாா்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படுவதோடு வாழ்வாதாரத்திற்கும் நிதி உதவிகளும் வழங்கப்படவுள்ளது.
வீட்டுத்திட்டத்தை ஹாபிடாட் பேரர் ஹியுமானிட்டி நிறுவனமும், பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை வேல்ட் விசன் நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளன.
இங்கு கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு ஜரோப்பிய ஒன்றியம் 2005 முதல் இலங்கையில் பணியாற்றி வருகிறது. கிளிநொச்சி முல்லைத்தீவு,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 2455 வீடுகளை அமைப்பதற்கு உதவியுள்ளோம், இத்திட்டத்தின் கீழ் தனியோ வீடுகளை மாத்திரமன்றி மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் உதவிகளை வழங்கி வருகின்றோம் எனத் தெரிவித்தார்