நேற்றையதினம் சட்டசபையில் வைத்து தாக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் இதன் போது சட்டசபை தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் புகார் தெரிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதுடன் சட்டசபை சம்பவங்கள் மற்றும் ரகசிய வாக்கெடுப்புக்கு வலியுறுத்துவது இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
நேற்று சட்டசபையில் அமளி ஏற்பட்ட நிலையில் சட்டசபைக்குள் போராட்டம் நடத்திய ஸ்டாலின் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.