Home இலங்கை கேப்பாபிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்

கேப்பாபிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்

by admin


கடந்த 23 நாட்களாக  தமது காணிகளை விடுவிக்க கோரி உரிமைப் போராட்டம் நடத்திவரும்  முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று  ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து  முன்னெடுத்திருந்த இந்தப் போராட்டத்தில்  மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அவர்களது பூர்வீக காணிகளை அவர்களிடம் மீளக் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதோடு பல்வேறு சுலோகங்கள் எழுதிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்

இவ் ஆர்ப்பாட்டத்தில்  மத்திய மகாணா சபையின்  முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, கலாநிதி விக்ரமபாகு கருணதிலக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More