162
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்துள்ளார்.
இதனையடுத்து, இப்பேரவையின் கொடி, நிர்வாகிகள் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்புஇன்று மாலை 5 மணிக்கு ”ஜெ.தீபா பேரவை” என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாக முறைப்படி அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த கொடி அ.தி.மு.க.வின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love