165
பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன் கிளொய்ட் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதன் பின்னர், அது தொடர்பில் வாக்களிக்கும் உரிமை பிரித்தானிய மக்களுக்கு எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய பிரஜைகள் மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love