158
தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொர்னே மோர்க்கல் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சில காலங்களாக மோர்கல் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் மொர்கல் பங்கேற்க உள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மொர்கல் இவ்வாறு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. மேலும் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் நோக்கில் ஹென்றிச் கிலாசென் ( Heinrich Klaasen ) உம் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
Spread the love