Home இலங்கை 3ஆம் இணைப்பு – ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது:-

3ஆம் இணைப்பு – ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது:-

by admin

க.சாந்தலிங்கம்(பாடகர் சாந்தன்) –  நேற்றைய தினம்  போதனா வைத்தியசாலை விடுதி இல. 9 இல் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சாந்தன் அவர்களது  2 சிறுநீரகங்களும் பாதிப்புற்ற நிலையில்  நீண்ட காலமாக போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இரத்த சுத்திகரிப்பும் (Dialysis)  கிராமமாக செய்யப்பட்டது .
இனறைய தினம்  இரத்த சுத்திகரிப்பு செய்ய ஏற்பாடாகி இருந்தது . எனினும் உடல்நிலை மிக பாத்திக்கப்பட்டிருந்தது.   இதயம் மற்றும் சுவாசப் பகுதிகள் பாதிப்படைந்தன.  மேலும் குருதியில் உப்புகளின் அளவும் அதிகரித்துக் காணப்பட்டது . இன்று அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும்  பி.ப 2.20  மணியளவில் அவரது  இறப்பு நிகழ்ந்தது .
பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்
2ஆம் இணைப்பு – ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது:-
ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரான சாந்தன் என அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் 2.10க்கு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஈழத்தின் புகழ்பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் ஈழத்தின்  சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர்.

1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார்.

1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்.

இவர் பாடிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார், ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற பல புரட்சிப் பாடல்கள் பிரபலமானவை. தன் புரட்சிகார பாடல்களால் உலக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்ற பாடகராகவும் மிளிர்ந்தவர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More