Home இந்தியாஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர்கள் புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர்

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர்கள் புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர்

by admin

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக  போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள்  இணைந்து புதிய கட்சி ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

புதிய அரசியல் கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் கட்சியின் பெயரை அறிவித்ததுடன்  கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும்  இன்று ஆரம்பமாகியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More