Home இலங்கைபுதிய பிரதம நீதியரசர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

புதிய பிரதம நீதியரசர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

by admin


புதிய பிரதம நீதியரசர் ஒருவரை தெரிவு செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது பதவி வகித்து வரும் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் பதவியிலிருந்து நாளை ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.

புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 65 வயதான ஸ்ரீபவன், இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக பதவி வகித்து வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி ஸ்ரீபவன் பிரதம நீயதிரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பிரதம நீதியரசர் பதவிக்காக உச்ச நீதிமன்றின் நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் பிரியசாத் டெப் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More