அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.