உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறைமை தொடர்பான உத்தேச திட்டம் எதிர்வரும ;இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிவழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்; உருவாக்கப்படவுள்ள பல்வேறு பொறிமுறைகளில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்;து, இந்த பொறிமுறை உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.