Home உலகம் எகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் பதவி இழந்தார்

 எகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் பதவி இழந்தார்

by admin


எகிப்தின் பாராளுமன்றில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த உறுப்பினர் ஒருவர் பதவியை இழந்துள்ளார். அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாராளுமன்றில் குரல் கொடுத்து வந்த பாராளுமன்ற உறுப்பினரான மொகமட் அன்வர் சடாற்   ((Mohammed Anwar Sadat ) என்ற பாராளுமன்ற உறுப்பினரே இவ்வாறு உறுப்புரிமையை இழந்துள்ளார்.

ஜனாதிபதி  Abdul Fattah al-Sisi க்கு ஆதரவானவர்களே பாராளுமன்றில் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றின் 596 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வரும் நிலையில்,  மொகமட் அன்வர் சடாற்றுக்கு எதிராக 468 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

முக்கிய தகவல்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கியதாகவும், போலி கையொப்பங்களை திரட்டி பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் குற்றம் சுமத்தி பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து   மொகமட் அன்வர் சடாற்   நீக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More