163
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாகாண மட்டத்தில் மருத்துவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடப்பட வேண்டுமென கோரியே போராட்டம் நடத்தப்படுகின்றது. இதற்கமைய இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 வரை இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
Spread the love