Home இந்தியாபிரிவினைவாதக்குழுவின் முக்கியஸ்தர் கைது

பிரிவினைவாதக்குழுவின் முக்கியஸ்தர் கைது

by admin


பிரிவினைவாத இயக்கமான ஹரியத் மாநாட்டு கட்சியின் பொதுச்செயலாளரான ஷபிர் அகமது ஷா என்பவரை  இந்திய காவல்துறையினர்  இன்று கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க போராடிவரும் கட்சிகளில்  ஹரியத் மாநாட்டு கட்சியும் ஒன்றாகும்.   ஸ்ரீநகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டிரால் நகரில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக, இன்று காலை தனது அமைப்பினருடன் வந்தபோது, அவரை தடுத்து நிறுத்திய  காவல்துறையனர் அவரையும் அவருடன் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக சிறையிலும், வீட்டுச் சிறையிலும் தொடர்ந்து தடுத்து  வைக்கப்பட்டிருந்த ஷபிர் அகமது ஷா கடந்த சனிக்கிழமைதான்  விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More