176
சர்வதேச ஒருநாள் போட்டித் தர வரிசையில் தென் ஆபிரிக்கா முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலிலேயே தென்னாபிரிக்க அணி முதலிடத்தை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் தென்னாபிரிக்கவுக்கு இந்த முதலாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த பட்டியலின் இரண்டாம் இடத்தில் அவுஸ்ரேலிய அணியும், மூன்றாம் இடத்தில் நியுசிலாந்து அணியும் காணப்படுகின்றன. இந்தியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் முறையே, நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களை பெற்றுள்ளன.
Spread the love