இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தால் கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இவை அனைத்தும் ரிக்டரில் சுமார் 4 அலகுகளாக பதிவாகி இருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டம் நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டு வருகின்ற குஜராத் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.