பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு20 போட்டித் தொடரில் பேஸ்வார் சால்மி கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. லாகூரின் கடாபி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 2009ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் போட்டியொன்று நடைபெற்றமை இதுவேயாகும். ஆயிரக் கணக்கான துருப்பினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய குவாட்ட அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பேஸ்வார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் கம்ரன் அக்மால் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் எர்மிட் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவாட்ட கிலெடியேட்டர்ஸ் அணி 16.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் சேன் ஏர்வின் 24 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹாமட் அஸ்கார் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.