Home இந்தியாவைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை படைத்துள்ளார்.

வைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை படைத்துள்ளார்.

by admin


காயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து புதிய சாதனை படைத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.  பார்வை குறைபாடு உள்ள வைக்கம் விஜயலட்சுமி பாடுவது தவிர காயத்ரி வீணை வாசிப்பதிலும் வல்லவர். இந்நிலையில் கொச்சியில் கடந்த 5ம் திகதி நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் அவர் தொடர்ந்து 5 மணிநேரம் காயத்ரி வீணை வாசித்தார்.

இந்தநிகழ்வில் தொடர்ச்சியாக 67 பாடல்களை வீணையில் வாசித்ததன்  மூலம் அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த லிம்கா சாதனை புத்தக்கத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக காயத்ரி வீணையில் 51 பாடல்கள் வாசிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை விஜயலட்சுமி முறியடித்துள்ளார்.  இசை தான் தன் வாழ்க்கை என்று கூறி வரும் விஜயலட்சுமி இந்த சாதனை தனது பெற்றோர், குருமார்களால் சாத்தியமானது எனத் தெரிவித்துள்ளாா்.   வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக அண்மையில்  கண் பார்வை கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயலட்சுமி. அவருக்கும், கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோசுக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் திருமணம் நின்றிருந்தது.  திருமணத்திற்கு பிறகு பாட வேண்டாம் என்று சந்தோஷ் கூறியதை தொடர்ந்து  விஜயலட்சுமி தனது இசை பணியை தொடர்வதற்காக திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More