Home இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் புகையிரத குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்ட தீவரவாதி சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தில் புகையிரத குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்ட தீவரவாதி சுட்டுக்கொலை

by admin


இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவரவாதி என  சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய தீவிரவாத தடுப்புப் படையினர் மேற்கொண்டிருந்த தேடுதல் வேட்டை 11 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை லக்னௌவில் உள்ள ஒரு வீட்டில்  குறித்த தீவரவாதி தங்கியிருக்கின்றார் என கிடைத்த தகவல்களை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது,  இருதரப்பினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இறுதியில் குறித்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்ட தீவிரவாதி ஐ.எஸ். அமைப்பின்  சபியுல்லா என  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர் புகையிரத குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன்  தங்கியிருந்த மேலும் 2 தீவிரவாதிகள் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More