ஈராக்கில் திருமண வைபவமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் திக்ரித் நகாில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குறித்த தாக்குதலை அடுத்து, தாக்குதல் இடம்பெற்ற பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளதுடன் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ். இன் கட்டுப்பாட்டில் இருந்த திக்ரித் நகரை, ஈராக் பாதுகாப்பு படையினர் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.