168
காவல்துறை மா அதிபர் ,வெளிநாட்டு பயணம், கடும்போக்குவாதம், வன்முறைகள்
காவல்துறை மா அதிபர் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். பங்களாதேஸில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் முதல் எதிர்வரும் 14ம் திகதி வரையில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஸில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தெற்காசிய மற்றும் அண்டை நாடுகளின் காவல்துறை உயர் அதிகாரிகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றனர். கடும்போக்குவாதம், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது.
Spread the love