இலங்கைக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த உறவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, வடகொரிய உயர்மட்ட ராஜதந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் வடகொரியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில ராஜதந்திரிகள் இலங்கைக்கு மூன்று தடவைகள் சென்றுள்ளனர். வடகொரியாவைச் சேர்ந்த ராஜதந்திரி Kim Hyok Chan இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் படகு கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் அமைப்பு தடை விதித்துள்ள நிலையில் இலங்கையுடன் வேறும் வழிகளில் தொடர்பு கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.