இலங்கை பிரதான செய்திகள்

கிண்ணியாவில் இன்று மேலும் இருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு


திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உள்பட மேலும் இருவர் இன்று ஞாயிறுக்கிழமை  உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனைத் தொடர்ந்து  டெங்கு காய்ச்சல் காரணமாக கிண்ணியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக  அதிகரித்துள்ளது. திருகோணமலை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமியும் 40 வயதான பெண்ணொருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.

இரு வார காலப்பகுதிக்குள் கிண்ணியாவில் 3 மாணவர்கள் ,3 பெண்கள் உள்பட 8 பேர் உயரிழந்துள்ளதுடன் 1200 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் நோய் பரவுவதனை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்கள் பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap