ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்துகின்றதா என்பதனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதனைக் கண்காணிப்பதற்கு கொழும்பில் ஓர் அலுவலகம் நிறுவப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.