சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, குறித்த ஐவரையும் 22.03.2017 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த சந்தேகநபர்கள் ஐந்து பேரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே ஐவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.