213
இலங்கை கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்
சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் போராட்டத்தில் இலங்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பா.ஜனதா அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் போன்ற பதாகைகளையும் கையிலேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love