இந்தியா

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட   துப்பாக்கிப் பிரயோகத்திற்கு எதிராக  கடந்த 7 நாள்களாக ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 6ம்திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரிட்ஜோ என்ற மீனவர்  உயிரிழந்ததனைத் தொடர்ந்து  மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் ,  கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.  எதிர்வரும் மார்ச் 20ம் திகதி மீனவர்கள் இந்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும்  உயரதிகாரிகளை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply