இலங்கை

சபாநாயகர் பதவி விலக வேண்டும் – உதய கம்மன்பில


சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலக  வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கரு ஜயசூரிய தம்மை நேசித்து, தமது கௌரவம் குறித்து கவனம் செலுத்தினால் பதவி விலக  வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கரு ஜயசூரிய அனைவரினாலும் கௌரவமாக மதிக்கப்படும் ஒர் நபர் என  குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றிலிருந்து வெளியேற்றறப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அநீதியான சம்பவமொன்று இழைக்கப்பட்டால் அது குறித்து கருத்து வெளியிடும் கடப்பாடு தமக்கு உண்டு என குறிப்பிட்டுள்ள அவர் கரு ஜயசூரியவின் பிரபல்யத்தை கட்டுப்படுத்தவும், அவரை  நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கிலும் இவ்வாறு சபாநாயகர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply