இலங்கை

மஹிந்த ராஜபக்சவிற்கு ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  எதிர்வரும் வியாழக்கிழமை பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது  சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தினை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அதன்பின்னர்  சட்டமாஅதிபருக்கு அனுப்பப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply