173
பிரெக்சிற் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது தொடர்பில் லிஸ்பன் விதியின் 50ஆவது சரத்து விரைவில் செயலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எலிசபெத் மகாராணி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அது சட்டமாக்கப்படும் எனவும் குறித்த நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரதமர் தெரேசா மே, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முறைப்படி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Spread the love