Home உலகம்பிரான்சில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – சர்வதேச நாணய நிதிய அலுவலகத்துக்கு முன்பாகவும் ஒரு பார்சல் குண்டுவெடிப்பு பலர் காயம் –

பிரான்சில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – சர்வதேச நாணய நிதிய அலுவலகத்துக்கு முன்பாகவும் ஒரு பார்சல் குண்டுவெடிப்பு பலர் காயம் –

by admin


தெற்கு பிரான்ஸ் பகுதியிலுள்ள  பாடசாலையொன்றில் இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டில் இருவர்; காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரான்சின் க்ராஸ்சே பகுதியுள்ள உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபரை இலக்கு வைத்து மாணவன் ஒருவரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ரைபிள் ஒன்று இரண்டு கைத்துப்பாக்கிகள், மற்றும் இரண்டு கிரனைட் சகிதம் தாக்குதலை மேற்கொண்ட 17 வயதுடைய குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் பிரான்சிலுள்ள சர்வதேச நாணய நிதிய அலுவலகத்துக்கு முன்பாகவும் ஒரு பார்சல் குண்டு வெடித்துள்ளதாகவும் அதிலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More