Home இந்தியாநீதி கிடைக்கும் வரை டெல்லியை விட்டு செல்லப்போவதில்லை – அரைநிர்வாண போராட்டம் தொடர்கிறது:-

நீதி கிடைக்கும் வரை டெல்லியை விட்டு செல்லப்போவதில்லை – அரைநிர்வாண போராட்டம் தொடர்கிறது:-

by admin

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நான்கு நாட்களாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். வீதிகளில் படுத்துறங்கி போராடும் அவர்கள், 100 நாட்கள் சென்றாலும் நீதி கிடைக்கும் வரை டெல்லியை விட்டு செல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளின் போராட்டம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினாகள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களின் செவிகளை எட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More