Home இலங்கைகாணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் இராணுவ வெளியேற்றம் வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்

காணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் இராணுவ வெளியேற்றம் வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்

by admin

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கிளிநொச்சி வர்த்தகர்கள், விவசாய அமைப்பினர், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப்பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, சம உரிமை இயக்கம், முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பு எனப் பல அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More