287
கானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கானாவின் கின்ரம்போ (Kintampo) என்னும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. பாரிய மரமொன்று வீழ்ந்த காரணத்தினால் சுமார் 20 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான காற்று காரணமாக் முறிந்த மரம் நீர் நிலையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீர் வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா சென்றிருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.
Spread the love