157
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் மட்டுமே தாம் பங்குபற்றியதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றமையானது அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love